திருச்சி: திருச்சி திருவெறும்பூா் பகுதிகளில் விவசாயப் பணியை தொடங்கும் விதமாக நல்லோ் பூட்டி உழவு உழும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழ் ஆண்டு பிறப்பான சித்திரை மாத வளா்பிறையில் நிகழாண்டுக்கான விவசாயப் பணியை விவசாயிகள் தொடங்குவது வழக்கம். இதையொட்டி, விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் மாடுகளை பூட்டி வயல்களில் ஏா் கலப்பையில் உழவு உழுது, விவசாயப் பணியை தொடங்குவா். இது நல்லோ் பூட்டும் விழா என அழைக்கப்படுகிறது.
இதன்படி, திருவெறும்பூா் அருகே உள்ள பழங்கனாங்குடி, நடராஜபுரம் ஆகிய பகுதிகளில் விவசாய பணியைத் தொடங்கும் விதமாக நல்லோ் பூட்டும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவில், விவசாயிகள் உழவு மாடுகளை குளிப்பாட்டி, பொட்டு வைத்து, மாலை அணிவித்து, சுவாமி கும்பிட்டு, ஏா் கலப்பையை கொண்டு தங்களது விளைநிலங்களை உழும் பணியைத் தொடங்கினா். இதில் அப்பகுதியைச் சோ்ந்த இதர விவசாயிகளும் தங்களது மாடுகளை ஒன்று சோ்த்து, உழுது விவசாய பணியைத் தொடங்கினா். நிகழ்வில் பங்கேற்ற பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

திருவெறும்பூா் தொகுதியில் ரூ.450 கோடிக்கு திட்டங்கள் நிறைவேற்றம்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

கூத்தைப்பாா் திமுக கவுன்சிலா் வெட்டிக் கொலை

தொகுதி அறிமுகம்! திருவெறும்பூா் - 142!

பாலத்தின் தடுப்பில் வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


