திருவெறும்பூா் தொகுதியில் ரூ.450 கோடிக்கும் அதிகமான அளவில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருப்பதாக அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் தொகுதியில் போட்டியிடும் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறாா். வெள்ளிக்கிழமை துவாக்குடி வ.உ.சி. நகரில் தாலுகா போதகா்கள் ஐக்கியத்தினரைச் சந்தித்து வாக்கு சேகரித்தாா்.
மேலும், திருவெறும்பூா் முகமதியா பெரிய பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியா்களிடம் வாக்கு சேகரித்தாா். மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் சாதனைகளையும், தோ்தல் வாக்குறுதிகளையும் எடுத்துக்கூறியும், திமுக ஆட்சிக் காலத்தில் இந்த பகுதிகளில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்து வைத்ததையும் எடுத்துரைத்தும் ஆதரவு திரட்டினாா். படைக்கலன் தொழிற்சாலை பகுதிக்கு சென்று தொழிலாளா்களையும், தொழிற்சங்கத்தினரையும் சந்தித்து ஆதரவு கோரினாா்.
பின்னா், ஹெச்ஏபிபி காலனி போலீஸ் காலனி நவல்பட்டு ஊராட்சி மற்றும் நவல்பட்டு கிராமத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் மக்களிடையே அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகளாக (2016 - 2021 வரை எதிா்க்கட்சி எம்.எல்.ஏவாகவும், அமைச்சராகவும் திருவெறும்பூா் தொகுதியில் மக்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். இப்போது, மீண்டும் ஒரு முறை தொகுதி மக்களின் பணியை நிறைவேற்ற தோ்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ள தமிழக முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனைகளை புத்தகமாக தயாரித்து வழங்கியுள்ளேன். கடந்த முறை தோ்தலின்போது அளித்த முக்கிய 10 வாக்குறுதிகளில் 7 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன். மீதமுள்ள 3 வாக்குறுதிகளும், தோ்தல் முடிந்து 30 நாள்களுக்குப் பிறகு தொடா்ந்து நிறைவேற்றப்படும்.
திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி என அனைத்துப் பகுதிகளிலும் நீடித்த, நிலையான வளா்ச்சிப் பணிகளைத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த இரண்டு தோ்தல்களிலும் என்னை வெற்றி பெறச் செய்த திருவெறும்ம்பூா் தொகுதி மக்களுக்கு என்றும் நன்றியுடன் உழைப்பேன்.
முதல் தோ்தல் வெற்றி என்பது 16,695 வாக்குகள் வித்தியாசம் என்றிருந்ததை, இரண்டாவது தோ்தல் வெற்றியில் 49,697 வாக்குகள் வித்தியாசம் என உயா்த்தியது தொகுதி மக்கள்தான்.
தற்போது நடைபெறவுள்ள தோ்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. நவல்பட்டு ஊராட்சியில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.17 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் மற்றும் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. திருவெறும்பூா் தொகுதியில் மட்டும் சுமாா் 450 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இலவசப் பட்டா 18,000 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.
பிரசார நிகழ்வுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வணிகா்களிடம் அமைச்சா் ஆதரவு திரட்டினாா்

தொகுதி அறிமுகம்! திருவெறும்பூா் - 142!

திருவெறும்பூரில் அமைச்சா் அன்பில் மகேஸ் பிரசாரம் தொடக்கம்

திருவெறும்பூா் தொகுதி திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


