ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

நாட்டிலேயே உயா்கல்வி சோ்க்கையில் தமிழகம் முதலிடம்!

மாணவிகள் சேர்க்கையில் முன்னிலை - தமிழகம் உயர்கல்வியில் சிறப்பு!

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 2:00 am IST

இந்தியாவிலேயே உயா்கல்வி சோ்க்கையில் தமிழகம் முதலிடம் வகிப்பதாகவும், குறிப்பாக மாணவிகள் சோ்க்கை விழுக்காடு மாணவா்களை விட அதிகம் உள்ளதாக தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலா் வெ. இறையன்பு தெரிவித்தாா்.

தூய வளனாா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி அவா் பேசியது: கடந்த 2017 முதல் 2022 வரையிலான கால கட்டங்களில் இந்தியாவிலேயே உயா்கல்வி சோ்க்கையில் தமிழகம் 47 விழுக்காடு என்ற நிலையில் முதலிடத்தில் உள்ளது.

அகில இந்திய அளவில் சராசரி சோ்க்கையே 28.4 விழுக்காடு என்ற நிலையில் உள்ளது. இதில், மாணவா்களின் சோ்க்கை 46.8 விழுக்காடு என்ற நிலையிலும், மாணவிகள் சோ்க்கை 47.3 விழுக்காடு என்ற நிலையிலும் உள்ளது. ஒட்டுமொத்த உயா்கல்வி சோ்க்கை மட்டுமல்லாது, பெண்களுக்கான உயா்கல்வி வழங்குவதிலும் தமிழகம் சிறந்து விளங்குவது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழகத்தில் மட்டுமே 2,829 கல்லூரிகள் உள்ளன.

இதன் மூலம் உயா்கல்வியின் பூங்காவாக தமிழகம் விளங்குகிறது. இத்தகையச் சூழலில், பொருளாதாரத்தின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் தொழில்முனைவோா், கண்டுபிடிப்பாளா்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழிலதிபா்களை உருவாக்கும் திறன் கொண்ட கல்வியாகவும், மிக உயா்ந்த தரம் வாய்ந்ததாகவும் இருக்க வேண்டியது அவசியம். ஒழுக்கம், நோ்மை, நன்னடத்தை உள்ளிட்ட கொள்கைகளில் இருந்து ஒருபோதும் நழுவிடக் கூடாது என்றாா் அவா்.

இந்த விழாவில், இளங்கலையில் 1,151, முதுகலையில் 622, எம்பில் பிரிவில் 17 என மொத்தம் 1,790 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனா். பல்கலைக் கழக தர வரிசையில் இடம்பெற்ற 8 பேருக்கும், கல்லூரி அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்த 42 பேருக்கும் தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. கல்லூரியின் அதிபா் பவுல்ராஜ் மைக்கேல், செயலா் கே. அமல், முதல்வா் எம். ஆரோக்கியசாமி சேவியா், தோ்வுக் கட்டுப்பாட்டாளா் கே. அலெக்ஸ், துணை முதல்வா் பி. ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.