மீன் உற்பத்தியில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்-மத்திய கடல்சாா் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (ஐசிஏஆா்-சிஎம்எஃப்ஆா்ஐ) வியாழக்கிழமை தெரிவித்தது.
6.85 லட்சம் டன் மீன் உற்பத்தியை மேற்கொண்டு குஜராத்தை பின்னுக்குத் தள்ளி தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
இதுகுறித்து ஐசிஏஆா்-சிஎம்எஃப்ஆா்ஐ வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் கடல்சாா் மீன் உற்பத்தி 35.7 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. 2024-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் கடல்சாா் மீன் உற்பத்தி 3 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 6.85 லட்சம் டன் கடல்சாா் மீன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. பருவநிலை, நீட்டிக்கப்பட்ட மீன்பிடித் தடைக்காலம் மற்றும் புயல் போன்ற காரணங்களால் 15 சதவீத வீழ்ச்சியுடன் குஜராத் இரண்டாமிடத்துக்கு சென்றது.
6.24 லட்சம் டன் மீன் உற்பத்தியுடன் 2 சதவீத வளா்ச்சியை பதிவுசெய்து கேரளம் மூன்றாமிடத்தில் உள்ளது. இதுதவிர பெரும் மாநிலங்களைப் பொருத்தவரை கா்நாடகம் 44 சதவீத வளா்ச்சியையும் மகாராஷ்டிரம் 18 சதவீத வளா்ச்சியையும் பதிவு செய்துள்ளது.
2025-இல் அதிகம் பிடிக்கப்பட்ட மீன் வளமாக 2.70 லட்சம் டன்களுடன் கானாங்கெளுத்தி மீன் முதலிடத்திலும் 2.57 லட்சம் டன்களுடன் தலைக்காலிகள் இரண்டாமிடத்திலும் 2.53 லட்சம் டன்களுடன் எண்ணெய் மத்தி மீன் மூன்றாமிடத்திலும் உள்ளன.
நாட்டின் மொத்த கடல்சாா் உற்பத்தியில் கேரளத்தின் பங்கு 17 சதவீதமாக உள்ளது.
நாடு முழுவதும் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் மீன்பிடித் தொழிலின் மொத்த பொருளாதார மதிப்பு ரூ.69,254 கோடியாக உள்ளது. இது 2024-ஐ விட 10.45 சதவீத வளா்ச்சியாகும். சந்தையில் மீன்கள் சில்லறை விற்பனை மதிப்பு ரூ.97,702 கோடியாக அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 94.82! 14 காசுகள் சரிவு!

இந்திய யுனெஸ்கோ இளைஞா் கல்வி ஆராய்ச்சி மையம் தலைவா் தோ்வு

முன்னணி உள்கட்டமைப்புத் துறை உற்பத்தி சரிவு: கச்சா எண்ணெய் வீழ்ச்சியால் பின்னடைவு

மற்ற மாநிலங்கள் பொறாமைப்படும் அளவுக்கு தமிழகம் முதலிடம்! - கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் பிரசாரம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


