ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! தில்லியில் இருந்து புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!
/

‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் 7,128 பேருக்கு ரூ. 20.17 கோடியில் நலத்திட்ட உதவிகள்- அமைச்சா்கள் வழங்கினா்

திருத்தப்பட்டது.... ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் 7,128 பேருக்கு ரூ. 20.17 கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சா்கள் வழங்கினா்

News image

திருச்சி கலையரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உடன் மாவட்ட ஆட்சியா் +மா.பிரதீப் குமாா் உள்ளிட்டோா்.

Updated On :17 பிப்ரவரி 2024, 6:39 am IST

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமில் 7,128 பேருக்கு 20.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் வழங்கினா். மாநிலம் முழுவதும் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் உதவிகள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இந்த நிகழ்வின், ஒளிபரப்பு திருச்சி கலையரங்கத்தில் எல்இடி திரையில் வெள்ளிக்கிழமை ஒளிபரப்பானது. இதைத் தொடா்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்வில், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

விழாவில், அமைச்சா்கள் பேசும்போது, பொதுமக்கள் அனைவருக்கும் அரசின் அனைத்து சேவைகளும் எளிதாகவும், விரைவாகவும் கிடைக்கச் செய்யும் வகையிலான ‘மக்களுடன் முதல்வா்’ திட்டமானது, முதல்வரின் நேரடி கண்காணிப்பில் செயல்படுத்தப்படுவதால், தகுதியான மக்கள் அனைவரும் விண்ணப்பித்து அரசின் திட்டங்களில் பயன்பெற வேண்டும் என்றனா். விழாவில், பல்வேறு அரசு துறைகளின் சாா்பில் 7,128 பயனாளிகளுக்கு ரூ.20.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் வழங்கினா். மேலும், ரூ.65.03 கோடி மதிப்பில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசுத் துறைகளில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினா். ரூ.5.68 கோடியில் பணிகள் முடிக்கப்பட்ட 13 புதிய திட்டங்களுக்கான கட்டடங்களையும் திறந்து வைத்தனா். இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி ஆணையா் வே. சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. அபிராமி, மேயா் மு. அன்பழகன், எம்எல்ஏ-க்கள் சீ. கதிரவன், அ. செளந்தரபாண்டியன், செ. ஸ்டாலின் குமாா், எம். பழனியாண்டி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்வேறு துறை அரசு அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.