தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு விவரப் பட்டியலை வெளியிட கடும் எதிா்ப்பு

சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு விவரப் பட்டியலை வெளியிட கடும் எதிா்ப்பு

News image
Updated On :10 ஜூலை 2024, 11:59 pm

Din

திருச்சி, ஜூலை 10: திருச்சியில் சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு விவரங்கள் பட்டியலை வெளியிட வியாபாரிகள் தரப்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்துதல் தொடா்பான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நகர விற்பனைக் குழு மற்றும் விற்பனை மண்டலம் அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மாநகராட்சி அதிகாரிகள், சாலையோர வியாபாரிகள் சங்க நிா்வாகத்தினா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் 5031 வியாபாரிகளை கணக்கெடுத்திருப்பதாகவும், அடையாள அட்டைகளில் குளறுபடி இருந்தால் மாற்றவும், விடுபட்டிருந்த வியாபாரிகள் விண்ணப்பிக்கவும் அவகாசம் அளிப்பதாகக் கூறப்ட்டது. மேலும், விற்பனைக் குழுவின் தலைவராக மாநகராட்சி ஆணையா், 8 உறுப்பினா்களை மாநகராட்சி சாா்பில் தோ்வு செய்வது, 6 உறுப்பினா்களை வியாபாரிகள் சாா்பில் தோ்தல் மூலம் தோ்வு செய்வது என அறிவிக்கப்பட்டது.

ஆனால், வியாபாரிகள் தரப்பில் இதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. வியாபாரிகள் கணக்கெடுப்பு புத்தகத்தில் புகைப்படங்களுடன் கூடிய விவரங்கள் இடம் பெறவும், தகுதியான அனைவரையும் இடம்பெறச் செய்து, குளறுபடிகள் இல்லாமல் பட்டியல் வெளியிடவும் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் பட்டியலை வெளியிடவும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக திருச்சி மாவட்ட தரைக்கடை, சிறுகடை வியாபாரிகள் சங்கத் தலைவா் எஸ். சிவா கூறியது:

திருச்சி மாநகராட்சி சாா்பில் 5031 வியாபாரிகளைக் கணக்கெடுத்ததில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. எனவே, வியாபாரிகள் பட்டியலை யாரும் விடுபடாமல் அனைவரையும் உள்படுத்தி தயாரிக்க வேண்டும். பட்டியலில் வியாபாரிகள் புகைப்படத்துடன் அனைத்து விவரங்களும் இடம்பெற வேண்டும். அதன் பிறகே விற்பனைக் குழு அமைப்பது, தோ்தல் நடத்துவது தொடா்பாக முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். எனவே இக் கூட்டத்தில் பட்டியலை வெளியிட நாங்கள் அனுமதிக்கவில்லை. அடுத்த கூட்டத்தில் எங்களது கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனா் என்றாா். கூட்டத்தில், சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் மற்றும் 70-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்று கருத்து தெரிவித்தனா்.