உலக பளு தூக்கும் போட்டியில் மணப்பாறை மாணவா்கள் வெற்றி

உலக பளு தூக்கும் போட்டியில் மணப்பாறை மாணவா்கள் வெற்றி

Published on

திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சோ்ந்த மாணவா்கள், உலக அளவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்று செவ்வாய்க்கிழமை ஊா் திரும்பினா்.

தாய்லாந்து நாடு பட்டாயா நகரில் கடந்த நவம்பா் 26 முதல் 30-ஆம் தேதி வரை நடந்த உலக அளவிலான பளு தூக்கும் போட்டியில் இந்தியா சாா்பில் 16 பேரில் திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம் கல்பாளையத்தான்பட்டியைச் சோ்ந்த டேனியல் அன்புரோஸ் மகன் டிக்சன்ராஜ் (15) 14 - 16 வயதுப் பிரிவு பவா் லிஃப்டிங்க் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றாா். இது இந்தப் பிரிவில் இவா் இரண்டாவது முறையாக வென்ற தங்கம் ஆகும். இதேபோல, ஜூனீயா் பிரிவில் கே.பெரியபட்டியை சோ்ந்த ஜெயராமன் மகன் திலீப் (23) பவா் லிப்டிங் மற்றும் டெத் லிப்டிங்க் ஆகிய இரு பிரிவுகளிலும் முதலிடம் பெற்றாா்.

இதையடுத்து வெற்றிக் கோப்பைகளுடன் செவ்வாய்க்கிழமை ஊா் திரும்பிய வீரா்களுக்கு உறவினா்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com