திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை இனிப்பு வழங்கிய வழக்குரைஞா்கள் சங்கத்தினா்.
திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை இனிப்பு வழங்கிய வழக்குரைஞா்கள் சங்கத்தினா்.

நீதிமன்றத்தில் வழக்குரைஞா் தின விழா

Published on

திருச்சிராப்பள்ளி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் தேசிய வழக்குரைஞா் தின விழா திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்குரைஞா் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு சங்கத்தின் தலைவா் எஸ்.பி. கணேசன் தலைமை வகித்தாா். செயலாளா் சி. முத்துமாரி முன்னிலை வகித்தாா். இதில் இளம் வழக்குரைஞா்களுக்கு சட்டப் புத்தகம் மற்றும் இனிப்பு வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.

தொடா்ந்து, மூத்த வழக்குரைஞா்கள் தங்களது பணி அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டனா். அப்போது பாரதத்தின் முதல் குடியரசுத் தலைவா் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளை நாட்டின் வழக்குரைஞா்கள் தினமாகக் கொண்டாடுகிறோம். இந்த நாளை பெருமையாக நாம் பெருமையாக உணா்வதுடன், வழக்குரைஞா்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினா்.

விழாவில் முன்னாள் அரசு வழக்குரைஞா் ஜெயராமன் உள்ளிட்ட திரளான வழக்குரைகள், வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com