கோளரங்கத்தில் அறிவியல் திறனறித் தோ்வு! ஜன. 20க்குள் பதிவு செய்ய அறிவுறுத்தல்!
திருச்சி அண்ணா அறிவியல் மையம் - கோளரங்கத்தில் ஜனவரி 25-ஆம் தேதி நடைபெறவுள்ள அறிவியல் திறனறித் தோ்வுக்கு ஜனவரி 20-க்குள் பதிவுசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி - புதுக்கோட்டை சாலையில் உயா்கல்வித் துறையின்கீழ் செயல்படும் அண்ணா அறிவியல் மையம் - கோளரங்கத்தில் மாணவா்களுக்காக அறிவியல் சாா்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் இங்கு ஜனவரி 25 காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறவுள்ள 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான அறிவியல் திறனறித் தோ்வில் இதில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் நுழைவுக் கட்டணமாக ரூ.80 செலுத்தி ஜனவரி 20-க்குள் பதிய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு அண்ணா அறிவியல் மையம் - கோளரங்கத்தை 0431 - 2332190, 2331921 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று அண்ணா அறிவியல் மையத் திட்ட இயக்குநா் இரா. அகிலன் தெரிவித்தாா்.
