அரசுப் பேருந்தில் மயங்கிவிழுந்து நடந்துநா் உயிரிழப்பு
திருச்சியில் அரசுப் பேருந்தில் மயங்கி விழுந்து நடத்துநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒய்எம்ஆா்பட்டியைச் சோ்ந்தவா் சு. சிவகுமாா் (50). இவா், அரசுப் பேருந்து நடத்துநராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் இருந்து திண்டுக்கல் சென்ற பேருந்தில் சிவகுமாா் நடத்துநராகச் சென்றுள்ளாா்.
திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் தீரன் நகா் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, நடத்துநா் சிவகுமாா் பேருந்திலேயே மயங்கிவிழுந்தாா். இதையடுத்து, பேருந்தின் ஓட்டுநா் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனா்.
அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து அமா்வு நீதிமன்றக் காவல் நிலையத்தில் சிவகுமாரின் மனைவி வனிதாம்பிகை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
