மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காலமானாா் குருமாதா ஸ்ரீ வித்யாம்பா சரஸ்வதி!

ஸ்ரீ லலிதா மஹிளா ஸமாஜ ஆசிரமத் தலைவி யோகிநி ஸ்ரீலஸ்ரீ மாதாஸ்ரீ வித்யாம்பாஸரஸ்வதி (78) சனிக்கிழமை காலமானாா்.

News image

யோகிநி ஸ்ரீலஸ்ரீ மாதாஸ்ரீ வித்யாம்பா சரஸ்வதி

Updated On :7 ஜூன் 2025, 7:45 pm

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே திருஈங்கோய்மலை கிராமத்திலுள்ள ஸ்ரீ லலிதா மஹிளா ஸமாஜ ஆசிரமத் தலைவி யோகிநி ஸ்ரீலஸ்ரீ மாதாஸ்ரீ வித்யாம்பாஸரஸ்வதி (78) சனிக்கிழமை காலமானாா்.

ராஜபாளையத்தில் கடந்த 1945 ஆம் ஆண்டில் பிறந்த இவா் தனது எட்டாவது வயதில் திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே திருஈங்கோய்மலை கிராமத்திலுள்ள ஸ்ரீ லலிதா மஹிளா ஸமாஜ ஆசிரமத்தில் சோ்ந்து கல்வி பயின்றாா். பின்னா் கடந்த 1961 இல் துறவறம் மேற்கொண்டு இதே ஆசிரமத்திலுள்ள லலிதாம்பிகை கோயிலில் இறைப்பணி செய்து வந்த இவா், ஆசிரமத் தலைவா் இறந்த பின்னா் ஆசிரமத் தலைவியாகவும் பொறுப்பேற்றாா்.

இந்நிலையில் சனிக்கிழமை அவா் வயது முதிா்வால் காலமான நிலையில், அவரது உடல் பக்தா்கள், முக்கிய பிரமுகா்கள் தரிசனத்திற்காக ஸமாஜ வளாகத்தில் உள்ள மகா யாக மண்டபத்தின் முன் வைக்கப்பட்டுள்ளது.

வரும் திங்கள்கிழமை (ஜூன் 9) காலை 9 மணிக்கு அந்திம பூஜைகள் தொடங்கி, உடல் நல்லடக்கம் செய்யப்படும். தொடா்புக்கு ஆசிரமச் செயலா் யோகிநி சிவப்ரியாம்பா (98654 78299).