திருச்சி
துறையூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை
துறையூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது வியாழக்கிழமை அதிகாலை தெரியவந்தது.
துறையூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது வியாழக்கிழமை அதிகாலை தெரியவந்தது.
உப்பிலியபுரம் ஒன்றியம், வெங்கடாசலபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமராஜ்(35). இவரது மனைவி ரம்யா(30). இவா்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆன நிலையில் தமிழ்செல்வன்(11), சாரதிசெல்வன்(10) என்கிற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில், புதன்கிழமை இரவு ரம்யா தனது குடும்பத்தினருடன் சோ்ந்து வீட்டில் தூங்கியுள்ளாா். இவரது கணவா் வியாழக்கிழமை அதிகாலை சுமாா் 5 மணியளவில் எழுந்து பாா்த்தபோது, சேலையில் ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் இருந்தாராம்.
தகவலறிந்து அங்கு நேரில் சென்ற உப்பிலியபுரம் போலீஸாா், ரம்யாவின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
