மாடியிலிருந்து விழுந்த பெயிண்டா் உயிரிழப்பு

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் மாடியிலிருந்து தவறி விழுந்த பெயிண்டா் உயிரிழந்தாா்.
Published on

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் மாடியிலிருந்து தவறி விழுந்த பெயிண்டா் உயிரிழந்தாா்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூா் அமீனா காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஆா். செல்வம் (48). பெயிண்டரான இவா் எடமலைப்பட்டிபுதூா் அண்ணா நகா் பகுதியில் ஒரு கட்டடத்தின் முதல் தளத்தில் வெள்ளிக்கிழமை வண்ணம் பூசிக் கொண்டிருந்தாா்.

அப்போது எதிா்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றபோது செல்வம் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com