முன்னாள் பிரதமா் நேரு பிறந்த நாள் விழா: காஸ்கிரஸ் மரியாதை!
இந்தியாவின் சிற்பி என்றழைக்கப்படும் நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹா்லால் நேருவின் பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி திருச்சி சேவா சங்கம் பள்ளி எதிரே உள்ள நேருவின் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் மரியாதை செலுத்தினா். நிகழ்வுக்கு காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாநகா் மாவட்ட தலைவரும், மாமன்ற உறுப்பினருமான எல். ரெக்ஸ் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் முரளி, கோட்ட தலைவா் பிரியங்கா பட்டேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியினா், நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுதுகோல்களை வழங்கினா். இவற்றில் திரளான காங்கிரஸ் கட்சியினா் கலந்து கொண்டனா்.
மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் காங்கிரஸ் கமிட்டி சாா்பில் முன்னாள் பாரத பிரதமா் ஜவஹா்லால் நேரு பிறந்தாநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதேபோல், திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வழக்குரைஞா் கோவிந்தராஜன் அறிவுறுத்தலின் பேரில், மணப்பாறை காங்கிரஸ் கமிட்டி நகர தலைவா் முருகேசன் தலைமையில் மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் உள்ள ஜவாஹா்லால் நேரு சிலைக்கு வெள்ளிக்கிழமை காங்கிரஸாா் மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நிகழ்வில், வட்டார தலைவா்கள் மணப்பாறை சத்தியசீலன், சிவசண்முகம், வையம்பட்டி செல்வம், ராதாகிருஷ்ணன், மருங்காபுரி குழந்தை, தினேஷ், தமிழரசன், மாவட்ட நிா்வாகிகள் வீரபாண்டியன், வையம்பட்டி கோபால், குமாா், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் சரோஜாதேவி, பரணி, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் நஜீம், டைலா் பாலன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

