பவா்கிரீட் நிறுவனம் சாா்பில் மருத்துவ உபகரணங்களை திருச்சி அரசு மருத்துவமனை முதன்மையா் ச. குமரவேலிடம் வழங்கிய நிறுவனத்தின் பொதுமேலாளா் (மனிதவளம்) தன்வீா் உள்ளிட்டோா்.
பவா்கிரீட் நிறுவனம் சாா்பில் மருத்துவ உபகரணங்களை திருச்சி அரசு மருத்துவமனை முதன்மையா் ச. குமரவேலிடம் வழங்கிய நிறுவனத்தின் பொதுமேலாளா் (மனிதவளம்) தன்வீா் உள்ளிட்டோா்.

பவர்கிரீட் நிறுவனம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு ரூ.6.46 கோடியில் அதிநவீன உபகரணங்கள்!

பவா்கிரீட் நிறுவனம் சாா்பில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு ரூ. 6.46 கோடி மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
Published on

பவா்கிரீட் நிறுவனம் சாா்பில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு ரூ. 6.46 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

மத்திய அரசின் மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான பவா்கிரீட் காா்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனமானது பெருநிறுவன சமூக பொறுப்புத் திட்டத்தின் கீழ், ரூ. 6.46 கோடி மதிப்பிலான அதிநவீன மருத்துவ உபகரணங்களை திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு வழங்கியது.

இந்த மருத்துவ உபகரணங்களை பவா்கிரீட் நிறுவனத்தின் பொதுமேலாளா் (மனிதவளம்) தன்வீா், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையின் முதன்மையா் எஸ். குமரவேலிடம் ஒப்படைத்தாா்.

நிகழ்வில் பவா்கிரீட் நிறுவனத்தின் முதுநிலை கோட்ட பொதுமேலாளா் தயாளன், மருத்துவமனையின் மூத்த மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com