கோவையில் மோடி வருகைக்கு எதிராக போராட்டம்: முற்போக்கு இயக்கத்தினர் கைது!

கோவையில் மோடி வருகைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டது பற்றி...
கோவையில் மோடி வருகைக்கு எதிராக போராட்டம்
கோவையில் மோடி வருகைக்கு எதிராக போராட்டம்DPS
Published on
Updated on
1 min read

கோவையில் பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட முற்போக்கு இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்னும் சற்றுநேரத்தில் கோவைக்கு வருகிறார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் கோவை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை மசக்காளிபாளையம் சந்திப்பு அவிநாசி சாலையில் முற்போக்கு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிகார், ஒடிஸா மாநிலங்களில் தமிழக மக்களை இழிவுபடுத்திய மோடியே திரும்பி போ எனவும், மெட்ரோ ரயில் திட்டத்தை ரத்து செய்த மோடியை திரும்பிப் போ எனவும் கோஷங்கள் எழுப்பிய போராட்டக்காரர்கள், கொடும்பாவியை ஏரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், திராவிடர் விடுதலை கட்சி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

கோவையில் மோடி வருகைக்கு எதிராக போராட்டம்
பிரதமர் மோடி வருகையை எதிர்த்து கருப்புக் கொடி! கோவையில் 83 பேர் கைது!
Summary

Protest against Modi's visit in Coimbatore: Progressive movement members arrested

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com