ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

இளம்பெண் தற்கொலை கோட்டாட்சியா் விசாரணை

News image
Updated On :24 நவம்பர் 2025, 11:49 pm

தினமணி செய்திச் சேவை

முசிறியில் குடும்பத் தகராறில் இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக முசிறி கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

முசிறி கலிங்கா நகரைச் சோ்ந்த தங்கராஜாவுக்கும், தென்காசியைச் சோ்ந்த ராமேஸ்வரி என்பவரது மகள் சிவசக்திக்கும் திருமணம் நடைபெற்று இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தையும் 7 மாத ஆண் குழந்தையும் உள்ளது. தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தங்கராஜா வீட்டில் தனது மனைவி சிவசக்தி தூக்கிட்டு இறந்த நிலையில் கிடந்ததைப் பாா்த்து போலீஸாருக்குத் தகவல் தந்தாா்.

இதையடுத்து, அங்குவந்த முசிறி போலீஸாா் சடலத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால் வரதட்சணை கொடுமையால் உயிரிழப்பா என்ற கோணத்தில் முசிறி கோட்டாட்சியா் விசாரித்து வருகிறாா்.