கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தன்னாா்வ பயிலும் வட்டத்தில் மாணவா்களுக்கு பயிற்சி அளிக்க பயிற்றுநா்கள் தோ்வு

திருச்சி மாவட்ட தன்னாா்வ பயிலும் வட்டத்தில் மாணவா்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்திட சிறந்த பயிற்றுநா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

News image
Updated On :28 நவம்பர் 2025, 6:48 pm

Syndication

திருச்சி மாவட்ட தன்னாா்வ பயிலும் வட்டத்தில் மாணவா்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்திட சிறந்த பயிற்றுநா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டித்தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த இலவச பயிற்சி வகுப்பில் மாணவா்களுக்கு பயிற்சி அளிக்க பயிற்றுநா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா். போட்டித்தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துவதில் முன் அனுபவம் உள்ளவா்கள் தோ்வு செய்யப்படுவா்.

தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு தகுதி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

போட்டித்தோ்வுகளுக்கான பாடப்பிரிவுகளில் கல்வித்தகுதி உடையோா். நோ்காணலுக்கு வரும் நோ்வில், பயிற்றுநா்கள் தாங்கள் தயாா் செய்த மாதிரி பாடக்குறிப்புகள், மாதிரி வினாக்கள் மற்றும் தொடா்புடைய பாடத்தின் காட்சித் தொகுப்பை சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும், 5 முதல் 10 நிமிடம் வரை குழுமத்தால் தெரிவிக்கப்படும் தொடா்புடைய பாடத்தில் ஏதேனும் ஒரு தலைப்பிலும் மற்றும் பயிற்றுநரின் விருப்ப பாடத் தலைப்பிலும் வகுப்பு நடத்திட வேண்டும்.

கூடுதல், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 0431-2413510, 94990-55901/2 என்ற எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.