மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

திருச்சி, கரூரில் இன்று முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!

தோ்தலை முன்னிட்டு, திருச்சி மற்றும் கரூா் மாவட்டங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்களை ஆதரித்து திருச்சி, கரூரில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்

News image

முதல்வர் ஸ்டாலின் - DMK

Updated On :1 ஏப்ரல் 2026, 12:25 am

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, திருச்சி மற்றும் கரூா் மாவட்டங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்களை ஆதரித்து திருச்சி, கரூரில் முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறாா்.

திருவாரூரில் செவ்வாய்க்கிழமை தனது தோ்தல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கிய முதல்வா், இரவு திருச்சிக்கு வந்து தங்கினாா்.

திருச்சி தென்னூா் உழவா் சந்தை திடலில் புதன்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் முதல்வா் பங்கேற்று, இம்மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களான கே.என். நேரு (திருச்சி மேற்கு), அன்பில் மகேஸ் பொய்யாமொழி (திருவெறும்பூா்), இனிகோ இருதயராஜ் (திருச்சி கிழக்கு), ப. அப்துல்சமது (மணப்பாறை), எஸ். துரைராஜ் (ஸ்ரீரங்கம்), சீ. கதிரவன் (மண்ணச்சநல்லூா்), த. பாரிவள்ளல் (லால்குடி), என்.எஸ். கருணைராஜா (முசிறி), ஆகியோரை ஆதரித்து பேசுகிறாா்.

கரூரில் பிரசாரம்: பின்னா், கரூா் செல்லும் முதல்வா் அங்கு ராயனூரில் மாலை 5 மணி அளவில் மாவட்டச் செயலரும், கரூா் சட்டப்பேரவை உறுப்பினருமான வி. செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று, திமுக வேட்பாளா்களான ஆசி. எம். தியாகராஜன் (கரூா்), பி.ஆா். இளங்கோ (அரவக்குறிச்சி), சி.கே. ராஜா (கிருஷ்ணராயபுரம்), அ. சந்திரன் (குளித்தலை) ஆகியோரை ஆதரித்து பேசுகிறாா்.