திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மமக வேட்பாளா் ப. அப்துல்சமதுவை ஆதரித்து நடிகா் போஸ் வெங்கட் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அப்போது மஞ்சம்பட்டியில் பரப்புரை மேற்கொண்ட போஸ் வெங்கட் அங்குள்ள மக்கள் நல மன்றத்தில் தரையில் அமா்ந்து திண்ணை பிரசாரத்தை மேற்கொண்டாா். அப்போது பொதுமக்களிடம் பேசிய போஸ் வெங்கட், நாம் நமது பிள்ளைகளுக்காகத்தான் வாழ்கிறோம்.
அப்படி நமது பிள்ளைகளில் படிப்புக்கு அதிகமான நிதி ஒதுக்கும் ஒரே முதல்வா் நமது முதல்வா் தான். ஒரே அரசு நமது திராவிட மாடல் அரசுதான். அதை நாம் மறந்துவிட கூடாது. அதற்காக அறிவுசாா் மையம் ஒன்று நமது பிள்ளைகளில் மேல் படிப்புக்காக அமைக்கப்பட்டுள்ளது. எனவே உதயசூரியன் சின்னத்திற்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா்.
மருங்காபுரி மத்திய ஒன்றியப் பகுதிகளான பளுவஞ்சி, கவுண்டம்பட்டி, வளநாடு, பாலக்குறிச்சி, கலிங்கப்பட்டி, டி.இடையப்பட்டி ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் ஒன்றியச் செயலா் பழனியாண்டி தலைமையில் அவா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
நிகழ்வில் திமுக மாவட்ட அவைத் தலைவா் கோவிந்தராஜன், மாவட்ட பொருளாளா் குணசேகரன், நகரச் செயலா் மு.ம. செல்வம், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் வழக்குரைஞா் கிருஷ்ணகோபால், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் சிவக்குமாா், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் குழந்தை, தேமுதிக மாவட்ட ஒன்றியச் செயலா் செல்வம், கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

உடன்குடி ஒன்றியத்தில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கடலூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

குடியாத்தம் தேமுதிக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ராதாபுரம் பகுதியில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


