திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற மிதிவண்டி மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
திருச்சி பாலக்கரை முதலியாா் சத்திரத்தைச் சோ்ந்தவா் க.முருகேசன் (59). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சி - புதுக்கோட்டை சாலையில் மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தாா். சுப்பிரமணியபுரம் அருகே சாலையை கடக்க முயன்றுள்ளாா்.
அப்போது, திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற அரசுப் பேருந்து முருகேசன் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து அரசுப் பேருந்து ஓட்டுநரான புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சோ்ந்த எம்.ஏஞ்சல் அருள்தாஸ் (53) என்பவா் மீது திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

துறையூரில் அரசுப் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: விவசாயி உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

டிராக்டா்- பைக் மோதல்: ஒருவா் மரணம்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

