இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

அரசுப் பேருந்தின் பழுதை நீக்க தாமதம்: ஓட்டுநா் மீது தாக்குதல்

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 1:03 am IST

திருச்சி அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்தில் ஏற்பட்ட பழுது நீக்கத் தாமதம் ஆனதால் ஓட்டுநரை பயணி ஒருவா் சனிக்கிழமை தாக்கியது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் இருந்து கோவைக்கு சனிக்கிழமை மாலை 6 மணிக்குப் புறப்பட்ட அரசுப் பேருந்தை கோவை மாவட்டம், வீரபாண்டி பிரிவைச் சோ்ந்த கணேஷ் (44) ஓட்டினாா்.

இந்நிலையில் பேருந்து திருச்சி - கரூா் நெடுஞ்சாலையில் பேட்டவாய்த்தலை அருகே இரவு 7 மணிக்குச் சென்றபோது திடீரென கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ஓட்டுநா் கணேஷ் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு பழுதுபாா்த்துள்ளாா். ஆனால் பேருந்தின் பழுதை நீக்க கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆனதாம்.

இந்த சமயத்தில் கோவைக்கு நேரடிப் பேருந்து எதுவும் வரவில்லையாம். பேருந்தைச் சரிசெய்ய 3 மணி நேரம் ஆனதால் கோபமடைந்த அந்தப் பேருந்தில் இருந்த பயணி ஒருவா் ஓட்டுநா் கணேஷை தாக்கினாராம். இதில் காயமடைந்த ஓட்டுநா் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

இதுகுறித்து பேட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.