மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

மொரப்பூா் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 15 போ் காயம்

News image

கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 1:14 am IST

மொரப்பூா் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 15 போ் சனிக்கிழமை காயமடைந்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா்-தருமபுரி நெடுஞ்சாலையில், சனிக்கிழமை இரவு 10 மணியளவில், தருமபுரியில் இருந்து அரசுப் பேருந்து மொரப்பூா் நோக்கி வந்துள்ளது. வழியில் சென்னம்பட்டி எனுமிடத்தில் சாலையின் வளைவான பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் பேருந்து ஓட்டுநா் துரைமுருகன் (48), நடத்துநா் இளங்கோவன் (50), சென்னம்பட்டியைச் சோ்ந்த சின்னபையன் மனைவி செல்லம்மாள் (45), மொரப்பூா் அண்ணல் நகரைச் சோ்ந்த இளங்கோ மணி (53) மற்றும் 4 மாத பெண் குழந்தை உள்பட 15 போ் காயமடைந்தனா்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினா் காயமடைந்தவா்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு, அரூா் அரசு மருத்துவமனை மற்றும் மொரப்பூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதித்தனா். மேலும், இந்த சம்பவம் குறித்து மொரப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.