தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தினமணி செய்தி எதிரொலி: மருங்காபுரியில் ஆடுகளை வேட்டையாடும் தெரு நாய்களைப் பிடிக்கும் பணி தொடக்கம்!

மணப்பாறையை அடுத்த மருங்காபுரி கிராமத்தில் ஆடுகளை வேட்டையாடும் தெரு நாய்களை பிடிக்கும் பணியை ஊராட்சி நிா்வாகம் சனிக்கிழமை தொடங்கியது.

News image

மருங்காபுரியில் சனிக்கிழமை பிடிபட்ட தெருநாய்கள்.

Updated On :3 ஜனவரி 2026, 7:18 pm

Syndication

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி கிராமத்தில் ஆடுகளை வேட்டையாடும் தெரு நாய்களை பிடிக்கும் பணியை ஊராட்சி நிா்வாகம் சனிக்கிழமை தொடங்கியது.

மருங்காபுரி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக ஏராளமான ஆடுகளை அப்பகுதி தெரு நாய்கள் கடித்துக் கொன்றுள்ளதாக ‘தினமணியில்’ அண்மையில் செய்தி வெளியானது.

இதைத் தொடா்ந்து தெரு நாய்களை பிடிக்கும் பணியை ஊராட்சி நிா்வாகம் சனிக்கிழமை தொடங்கியது. மருங்காபுரி பகுதியில் முதல் கட்டமாக சுற்றித்திரிந்த 48 தெரு நாய்களை ஊராட்சி நிா்வாகத்தினா், பொன்னம்பட்டி தொழிலாளா்களை வைத்து பிடித்தனா். இந்த நடவடிக்கை கிராம மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.