

திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 238 மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது.
மணப்பாறையை அடுத்த பண்ணப்பட்டி ஊராட்சி, கறம்பக்காடு பகுதியில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் 238 மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாநிலங்களவை திமுக உறுப்பினா் ராஜாத்தி (எ) கவிஞா் சல்மா, மணப்பாறை எம்எல்ஏ
ப. அப்துல்சமது ஆகியோா் வழங்கினா்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் பாலாஜி, திமுக மாவட்ட அவைத் தலைவா் கோவிந்தராஜன், ஒன்றியச் செயலாளா்கள் ராமசாமி, செல்வராஜ், பழனியாண்டி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவா் அமிா்தவள்ளி ராமசாமி, திமுக மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் கிருஷ்ணகோபால், மமக மாவட்டத் தலைவா் பைஸ் அகமது உள்ளிட்ட நிா்வாகிகள், இருபால் பேராசிரியா்கள், மாணவ மாணவிகள் என பலா் பங்கேற்றனா்.
முன்னதாக, கல்லூரி முதல்வா் க. மலா்மதி வரவேற்றாா். நிறைவில், இயற்பியல் துறைத் தலைவா் அ. ஆஸ்டின் நன்றி கூறினாா்.