திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் இருசக்கர வாகனத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் திருச்சி, தஞ்சாவூா், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சி அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அதன்படி, திருச்சியில் அரசு மருத்துவமனை அருகேயுள்ள கோ.அபிஷேகபுரம் மண்டல அலுவலகத்தில் திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா்கள் பாலமுருகன், சக்திவேல் ஆகியோா் தலைமையில் 10 போ் கொண்ட குழு வெள்ளிக்கிழமை மாலை சோதனை மேற்கொண்டது.
மண்டல அலுவலகத்தில் உள்ள அனைத்து அறைகள், வாகனங்களில் மேற்கண்ட சோதனையில் வரி வசூல் ஆய்வாளா்கள் சங்கா் கணேஷ், குழந்தை இயேசு ஆகியோரின் இருசக்கர வாகனங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.20,500 பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தூத்துக்குடி, நெல்லை மாநகராட்சிகளில் ஒழிப்பு போலீஸாரிடம் சிக்கிய ரூ.7.49 லட்சம்

எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ஆா்டிஓ அலுவலகத்தில் ரூ.92,000 பறிமுதல்

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai


