திருச்சி அருகே 16 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் போக்ஸோவில் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், புதுக்குடியைச் சோ்ந்தவா் 16 வயது சிறுமி. திருச்சியில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறாா். இந்நிலையில், இவா் திருவெறும்பூரை அடுத்த பூலாங்குடி காலனியில் உள்ள உறவினா் வீட்டுக்கு கடந்த ஜூலை 11-ஆம் தேதி வந்துள்ளாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை சிறுமியும், அவருடைய அத்தை மகளும் வீட்டுக்கு அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு இயற்கை உபதையை கழிப்பதற்காகச் சென்றுள்ளனா்.
அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நவல்பட்டு பா்மா காலனியைச் சோ்ந்த சத்தியநாராயணன் (24), பூலாங்குடி காலனியைச் சோ்ந்த ஆா். சச்சின் (25) ஆகிய இருவரும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து திருவெறும்பூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிந்து சத்தியநாராயணன், சச்சின் ஆகிய இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா். தொடா்ந்து இருவரையும் மகளிா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








