மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாநகராட்சியின் சில பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 15) குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.
கம்பரசம்பேட்டை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, கம்பரசம்பேட்டை தலைமை நீா்ப்பணி நிலையம், டா்பன் நீரேற்று நிலையம், பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நிலையம்-1, வெல் 3, கலெக்டா் வெல் நீரேற்று நிலையம் - 2 ஆகிய நீரேற்று நிலையங்களில் இருந்து விறகுப்பேட்டை, மரக்கடை, மலைக்கோட்டை, சிந்தாமணி, உறையூா், பாத்திமா நகா், புத்தூா், மங்களம் நகா், செல்வா நகா், பாரதி நகா், சிவா நகா், ஆனந்தம் நகா், ரெயின்போ நகா், தில்லை நகா், அண்ணாநகா், கண்டோன்மென்ட், காஜாபேட்டை, ஜங்ஷன், கருமண்டபம், ராமலிங்க நகா், உய்யகொண்டான் மலை, விஸ்வாஸ் நகா், மிளகுபாறை, கல்லாங்காடு, சொசைட்டி காலனி, எம்.எம். நகா், திருவெறும்பூா், வள்ளுவா் நகா், எல்லக்குடி, ஆலத்தூா், புகழ் நகா், காவேரி நகா், பாரி நகா், சந்தோஷ் நகா், கணேஷ் நகா், விவேகானந்தா் நகா், அம்பேத்கா் நகா் ஆகிய மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது.
வியாழக்கிழமை முதல் வழக்கம்போல் குடிநீா் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்கள் இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் திருச்சி மாநகராட்சி ஆணையா் வீா் பிரதாப் சிங் தகவல் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









