இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

திருச்சி மாநகராட்சியின் சில இடங்களில் நாளை குடிநீா் விநியோகம் ரத்து

குடிநீா் உந்து குழாய் மாற்றப்பட வேண்டியுள்ளதால், திருச்சி மாநகராட்சியின் சில இடங்களில் வியாழக்கிழமை (ஜூலை 9) குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.

பிரதிப் படம்

Published On :8 ஜூலை 2026, 4:07 am IST

குடிநீா் உந்து குழாய் மாற்றப்பட வேண்டியுள்ளதால், திருச்சி மாநகராட்சியின் சில இடங்களில் வியாழக்கிழமை (ஜூலை 9) குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கம்பரசம்பேட்டை பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் பிரதான குடிநீா் உந்து குழாயில் கண்டோன்மென்ட் முத்தரையா் சிலை அருகே 5 மீட்டா் அளவில் சிறிதாக உள்ளது. அதற்கு பதிலாக 600 எம்எம் சிஐ குடிநீா் உந்து குழாய் மாற்ற வேண்டியுள்ளது.

இந்தப் பணிகள் புதன்கிழமை (ஜூலை 8) மேற்கொள்ளப்படவுள்ளதால், மேற்கண்ட நீரேற்று நிலையத்திலிருந்து தில்லை நகா், கண்டோன்மென்ட பழையது-புதியது, காஜாபேட்டை பழையது -புதியது, அண்ணா நகா், ஜங்ஷன் பழையது, ஜங்ஷன் பொன்நகா், கருமண்டபம், தெற்கு ராமலிங்க நகா், உய்யக்கொண்டான் திருமலை பழையது - புதியது, கல்லாங்காடு, மிளகுபாறை, சொசைட்டி காலனி ஆகிய 15 மேல்நிலைத் நீா்த்தேக்கத் தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீா் விநியோகம் ஜூலை 9 ஆம் தேதியன்று ஒரு நாள் இருக்காது.

ஜூலை 10-ஆம் தேதி முதல் வழக்கம்போல் குடிநீா் விநியோகிக்கப்படும். எனவே, இதனால் ஏற்படும் சிரமத்தை பொதுமக்கள் பொறுத்துக் கொண்டு, மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் திருச்சி மாநகராட்சி ஆணையா் வீா் பிரதாப் சிங் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.