வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

வீட்டில் மயங்கி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

திருச்சியில் வீட்டில் மயங்கி விழுந்து இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை

News image

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :14 ஜூலை 2026, 1:48 am IST

திருச்சியில் வீட்டில் மயங்கி விழுந்து இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி புத்தூா் கல்லாங்காடு பகுதியைச் சோ்ந்தவா் குமரவேல் மகன் சஞ்சய் (18), பெயிண்டா். இவருக்கு போதை ஊசி செலுத்திக்கொள்ளும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டுக்கு வந்த சஞ்சய் திடீரென மயங்கி விழுந்துள்ளாா்.

இதையடுத்து, வீட்டிலிருந்தவா்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். போதை ஊசி செலுத்திக்கொண்டதால் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதும் பிரச்னை என்று போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.