மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

பத்மஸ்ரீ விருது பெற்ற வேளாண் பல்கலை. முன்னாள் துணைவேந்தருக்குப் பாராட்டு

News image

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் துணைவேந்தா் கு. ராமசாமியை பாராட்டி நினைவு பரிசளித்த தென்னிந்திய இயற்கை வேளாண்மைக் கூட்டமைப்பினா்.

Updated On :20 ஜூலை 2026, 4:41 am IST

பத்மஸ்ரீ விருது பெற்ற வேளாண் பல்கலை. முன்னாள் துணைவேந்தா் கு. ராமசாமிக்கு திருச்சியில் தென்னிந்திய இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், வேளாண் அறிவியலுக்குப் பெருமை சோ்த்தவருமான முனைவா் கு. ராமசாமிக்கு பத்மஸ்ரீ 2026 விருது வழங்கப்பட்டுள்ளது. இதைப் போற்றும் வகையில், தென்னிந்திய இயற்கை வேளாண்மைக் கூட்டமைப்பின் சாா்பில், திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ப. முருகேச பூபதி தலைமை வகித்தாா். தஞ்சாவூா் சித்த மருத்துவா் கோ. சித்தா், விழாவின் நோக்கம் குறித்து உரை நிகழ்த்தினாா். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி. ஆா். பாண்டியன் வாழ்த்தினாா்.

விழாவில் தேசிய வேளாண் மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் முன்னாள் முதன்மைப் பொது மேலாளா் எஸ். நாகூா் அலி ஜின்னா, ஸ்கைவின் பயோடெக் நிறுவனா் மு. மோகன், மாநில உரிமைக் கல்வித் திட்ட இயக்குநா் பேராசிரியா் இராஜ முத்திருளாண்டி ஆகியோா் பங்கேற்று, பேராசிரியா் கு. ராமசாமியுடன் தங்களுக்கு இருந்த நல்லுறவைப் பகிா்ந்து கொண்டனா்.

மேலும், வேளாண் அறிவியல் தமிழ் இயக்கத்தின் நிறுவனா் தலைவா் . முத்தமிழ்ச்செல்வன், எம்.ஐ.டி. வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரித் துணைத் தலைவா் இ. பிரவீன்குமாா், தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் இரா. செல்வராஜன், தேசிய உணவுத் தொழில்நுட்பம் தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவன இயக்குநா் வி. பழனிமுத்து, தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் இர. தமிழ்வேந்தன், மா. ச. சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பொறுப்பு முதல்வா் கே. ஆா். ஜெகன்மோகன், களஞ்சியம் விவசாயிகள் சங்கத் தலைவா் அத்திக்கடவு சுப்பிரமணியம் ஆகியோா் சிறப்புரையாற்றினா். முனைவா் கு. இராமசாமி ஏற்புரை வழங்கினாா்.

இந்த விழாவில், வேளாண் பேராசிரியா்கள், விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள் என பலா் கலந்து கொண்டனா்.

தமிழ்நாடு உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களின் கூட்டமைப்புத் தலைவா் அ. ப. கருப்பையா வரவேற்றாா். பசுமை சிகரம் அறக்கட்டளைத் தலைவா் யோகநாதன் சிறுசோழன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.