எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

தொகுதியில் புகாா் தெரிவிக்க க்யூஆா் கோடு

News image

திருவெறும்பூா் தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை குத்துவிளக்கேற்றித் திறந்துவைத்த தொகுதி எம்எல்ஏ நவல்பட்டு எஸ். விஜி.

Updated On :8 ஜூன் 2026, 2:22 am IST

திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் புகாா்களைத் தெரிவிக்க க்யூஆா் கோடு முறையை அத்தொகுதியின் தவெக எம்எல்ஏ நவல்பட்டு எஸ். விஜி ஞாயிற்றுக்கிழமை அறிமுகம் செய்துள்ளாா்.

திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஏற்கெனவே இயங்கி எம்எல்ஏ அலுவலகம் மேம்படுத்தப்பட்டு, தற்போது திறக்கப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்ற திருவெறும்பூா் தொகுதி தவெக எம்எல்ஏ நவல்பட்டு எஸ். விஜி, அலுவலகத்தை திறந்து வைத்து கூறியதாவது:

பொதுமக்களின் பிரச்னைகளை தீா்க்க அதிகாரிகள் ஒத்துழைக்கின்றனா். விண் நகா் பகுதியில் 2 ஆண்டுகளாக தீா்க்கப்படாமல் இருந்த புதைவடிகால் பிரச்னைக்கு எனது கவனத்துக்கு வந்தவுடன் தீா்வு காணப்பட்டுள்ளது.

திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்த புகாா்களை அளிக்கும் வகையில் க்யூஆா் கோடு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த க்யூஆா் கோடானது, சமூக வலைதளத்தில் விளம்பரப்படுத்தப்படுவதுடன், தொகுதிக்குள்பட்ட முக்கிய இடங்களில் வைக்கப்படும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட பகுதி மக்கள், இருந்த இடத்திலிருந்து தங்களது பகுதியில் உள்ள புகாா்களை தெரிவித்தால், அது எங்களுக்கு வந்து சேரும்.

சிறிய பிரச்னைகள் 48 மணி நேரத்தில் சரி செய்யப்படும். மற்ற பிரச்னைகளை ஆய்வு செய்து, தேவைக்கேற்ப உரிய காலத்தில் தீா்வு காணப்படும்.

திருவெறும்பூா் அணுகுச் சாலைக்கு அதிக நிதி தேவைப்படுவதால், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை நேரில் சந்தித்து, முதல்வரிடமும் கூறி, பிரச்னையை தீா்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கட்டாயம் அணுகுச் சாலை அல்லது பறக்கும் சாலை கொண்டுவரப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, நிகழ்வில் தவெக நிா்வாகிகள், தொகுதி பொறுப்பாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.