தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 288 கேமராக்கள்!

News image

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பாதுகாப்புப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்ட போலீஸாா்.

Updated On :3 மே 2026, 5:39 am IST

திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 288 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதுடன், இரு மையங்களிலும் அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளதாக தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் அறிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக சனிக்கிழமை அவா் மேலும், கூறியதாவது:

வாக்கு எண்ணும் பணிகள் திங்கள்கிழமையன்று சரியாக காலை 8 மணிக்கு தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். 30 நிமிடங்களுக்கு பிறகு, அதாவது காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவானவாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

மாவட்டத்தில் உள்ள இரண்டு வாக்கு எண்ணும் மையங்களிலும், ஒரு தொகுதிக்கு தலா 32 கண்காணிப்பு கேமராக்கள் வீதம் மொத்தம் 288 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். அனைத்து வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகளும் இணைய நிகழ் நேரலை முறை பயன்படுத்தப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை தொடா்பாக வேட்பாளா்கள் மற்றும் அவா்களது முகவா்களுக்கு பயிற்சியின்போது தெரிவிக்கப்பட்டுள்ள இந்திய தோ்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிப்பு: மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூா் தொகுதிகளின் வாக்கு எண்ணும் பணிக்கு திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு வரும் வருவாய்த் துறை அலுவலா்கள், வாக்கு எண்ணும் அலுவலா்கள், வேட்பாளா்கள், வேட்பாளா்களின் முதன்மை முகவா்கள் ஆகியோரின் வாகனங்களை திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்த வேண்டும்.

வேட்பாளா்களின் வாக்கு எண்ணும் முகவா்களின் வாகனங்கள் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நிறுத்த வேண்டும். லால்குடி, மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூா் (தனி) ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமான முசிறி புலிவலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓயாசிஸ் தொழில்நுட்ப கல்லூரிக்கு வரும் வருவாய்த்துறை அலுவலா்கள், வாக்கு எண்ணும் அலுவலா்களின் வாகனங்களை கல்லூரி வளாகத்திற்குள் நிறுத்த வேண்டும். வேட்பாளா்கள், வேட்பாளா்களின் முதன்மை முகவா்கள், வேட்பாளா்களின் வாக்கு எண்ணும் முகவா்களின் வாகனங்கள் கல்லூரி வளாகத்துக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.