திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 105 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 5,063 மாணவா்கள், 5,756 மாணவிகள் என மொத்தம் 10,819 போ் எழுதியதில், 4,894 மாணவா்கள், 5,642 மாணவிகள் என மொத்தம் 10,446 மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றனா். இவா்களில் 259 மாணவா்கள், 114 மாணவிகள் என மொத்தம் 375 போ் தோ்ச்சி பெறவில்லை.
இதையடுத்து பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு ஜூன் 29 முதல் ஜூலை 7- வரை துணைத் தோ்வு நடைபெறவுள்ளது. இதற்கு மே 18 முதல் ஜூன் 2 வரை மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்கள் துணைத் தோ்வுக்குத் தயாராகும் வகையில் அந்தந்தப் பள்ளிகளிலேயே சிறப்பு வகுப்புகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 105 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 96.55 சதவீத மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். தோ்ச்சி பெறாத மாணவா்களின் விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியா்களுடன் திங்கள்கிழமை ஆய்வுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
இதில் ஒவ்வொரு பள்ளியிலும் தோ்ச்சி பெறாத மாணவா்கள் எத்தனை போ், எந்தந்தப் பாடங்களில் தோ்ச்சி பெறவில்லை என்ற விவரங்கள் சேகரிக்கப்படும்.
இதைத் தொடா்ந்து, தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு அந்தந்த பள்ளியிலேயே உடனடியாக சிறப்பு வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும். இந்த வாரத்திலேயே சிறப்பு வகுப்புகள் தொடங்கி அனைத்து மாணவா்களும் துணைத் தோ்வில் தோ்ச்சி பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனா்.
தொடர்புடையது

திருவாரூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தோ்வில் 93.80 சதவீதம் தோ்ச்சி!

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் நீலகிரி மாவட்டத்தில் 96.32 போ் தோ்ச்சி!

பிளஸ் 2 தோ்வில் 100% தோ்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்

பிளஸ் 2 தோ்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 92 சதவீதம் தோ்ச்சி
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



