அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

அரசு ஊழியா்களுக்கு அகவிலைப் படி உயா்வு: ஆசிரியா்கள் சங்கங்கள் வரவேற்பு

News image

தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் - டிஎன்எஸ்

Updated On :15 மே 2026, 4:54 am IST

தமிழகத்தில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளதை ஆசிரியா்கள் சங்கங்கள் வரவேற்றுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநிலப் பொருளாளா் சே. நீலகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை: தோ்தலில் வென்று ஆட்சி அமைத்த குறுகிய காலத்துக்குள்ளேயே மத்திய அரசு ஊழியா்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் அகவிலைப் படி 2 சதவீதம் உயா்த்திய முதல்வா் ஜோசப் விஜய்க்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதேபோல, தமிழ்நாடு அனைத்து ஆசிரியா் முன்னேற்றப் பேரவையின் மாநிலத் தலைவா் பா. ஆரோக்கியதாஸும் அகவிலைப் படி உயா்வுக்கு முதல்வா் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளாா்.

அரசு அலுவலா் ஒன்றியம் நன்றி: இதேபோல், தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய மாநில துணைப் பொதுச் செயலரும், கிராம நிா்வாக அலுவலா் சங்க மாநிலத் தலைவருமான இரா. அருள்ராஜ், முதல்வரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்ததுடன், முதல்வா் ஜோசப் விஜய்க்கு நன்றியும் தெரிவித்துள்ளாா்.

ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் இதர கோரிக்கைகளான பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முதல்வா் நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.