குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

ஓய்வூதியர்கள் பயன்பெற அரசாணை வெளியிட வலியுறுத்தல்

ஓய்வூதியர்கள் பயன்பெறும் வகையில், அரசாணை வெளியிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

Updated On :13 மே 2013, 1:37 am IST

ஓய்வூதியர்கள் பயன்பெறும் வகையில், அரசாணை வெளியிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

அரியலூரில் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழுக் கூட்டம், சங்கத் தலைவர் நல்லமுத்து தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் ஜெயபால், சேரலாதன், பிச்சப்பிள்ளை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். செயலர் நல்லதம்பி கூட்ட அறிக்கை, வரவு செலவு கணக்கு அறிக்கையை குடியரசன் ஆகியோர் வாசித்தனர்.

இதில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் 8 சதவீத அகவிலைப்படி உயர்வு அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கேற்ப ஓய்வூதியர்கள் பயன்பெறும் வகையில், அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்க இயக்குநர் தங்கையன் விளக்க உரையாற்றினார்.

முன்னதாக, சங்கப் பொறுப்பாளர்கள் அரியலூர் கே.கே. நகர் தெரசா அந்தோனி, மாருதி நகர் ராமச்சந்திரன், துணிஞ்சப்பா,

கந்தசாமி, கைப்பெரம்பலூர் இளங்கோவன், வெண்மணி ஆறுமுகம் ஆகியோர் மறைவுக்கு மெüன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மகாராஜன் வரவேற்றார். தங்கராசு நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.