ஏரி,குளங்களை தூர்வார வேண்டும் : பாஜகவினர் தீர்மானம்

திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஏரி,குளங்களை தூர்வார வேண்டும் என பாஜகவினர் தீர்மானம் நிறைவேற்றினர்.
Updated on
1 min read

திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஏரி,குளங்களை தூர்வார வேண்டும் என பாஜகவினர் தீர்மானம் நிறைவேற்றினர்.
 திருமானூரில் அண்மையில் நடைபெற்ற அக்கட்சியின் ஒன்றிய செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:
 பிரதம மந்திரியின் உதய மித்திரா தொழில் முனைவோருக்கான கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், பயனாளிகளை அனைத்து வங்கிகளும் அலைக்கழிப்பதை கண்டிப்பது.
திருமானூரிலிருந்து ஏலாக்குறிச்சி செல்லும் மினிபேருந்து பெரியமறை வரை சென்று வர வேண்டும். ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்துக்கு செல்லும் சாலையில் உள்ள முள்புதர்களை அகற்ற வேண்டும். திருமானூர்-நாட்சிபுரம் சாலையை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியத் தலைவர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்தின், மாவட்ட பிரசார பிரிவு தலைவர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com