அரியலூர் வட்டம், அமீனாபாத், கீழையூர், உடையார்பாளையம் வட்டம் கோடங்குடி(தெற்கு), பருக்கல் (கிழக்கு), ஆண்டிமடம் வட்டம் வரதராஜன்பேட்டை,செந்துறை வட்டம் தளவாய் ஆகிய 6 கிராமங்களில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 17) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
அந்தந்த பகுதி வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெறும், இம்முகாமில் வருவாய்த்துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதியுடைய மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்படும். எனவே, பொதுமக்கள் இந்த சந்தர்ப்பம் மூலம் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் க.லட்சுமிபிரியா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.