தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அரியலூரில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான திறன் வளர்ப்பு பயிற்சி

அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில், மாவட்ட காவல்துறை அலுவலர்களுக்கு,குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான

News image
Updated On :20 அக்டோபர் 2017, 1:59 am

DIN

அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில், மாவட்ட காவல்துறை அலுவலர்களுக்கு,குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான திறன் வளர்ப்பு பயிற்சி அரியலூர் மாவட்ட ஆயுதப்படை கூட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட முதன்மை நீதித்துறை நடுவர் ஆ.மகாலட்சுமி பயிற்சியை தொடக்கி வைத்து பேசுகையில், 0-18 வயது பூர்த்தி ஆகாத அனைவரும் குழந்தைகள்தான். சட்டத்தில் 2 வகையான குழந்தைகள் கையாளப்படுகின்றனர். அவை சட்டத்திற்கு முரணான செயல்புரிந்த குழந்தைகள் மற்றும் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள்.
பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்படும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளாக கருதப்படுகின்றனர்.  இவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதி செய்யும் விதமாக மாவட்டத்தில் அரியலூர் காமராஜா நகரில் குழந்தைகள் நலக்குழு செயல்படுகின்றது.
சட்டத்திற்கு முரணாக செயல் புரிந்ததாக கருதப்படும் குழந்தைகள் காவல் துறையில் உள்ள குழந்தைகள் நல அலுவலர் வாயிலாக மாவட்ட அளவிலான சிறப்பு சிறார் காவல் அலகு மூலமாக குழந்தைகள் கையகப்படுத்தப்பட்டு இளைஞர் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.
அவ்வாறு சட்டத்திற்கு முரணாக செயல்புரிந்த குழந்தைகளை முறையாக கையாள வேண்டும் என்றார் அவர்.
ஓய்வு பெற்ற நீதிபதி மேகநாதன், வழக்குரைஞர் பகுத்தறிவாளன் ஆகியோர் பங்கேற்று பங்கேற்று, குற்ற வழக்குகளை விசாரணை செய்தல் மற்றும் கையாளும் முறைகள் குறித்தும்,குற்றம் புரிந்த நபர்களை கையாளும் விதம் குறித்தும், குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்களும், குற்றங்களுக்கேற்ற தண்டனைகளும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசின் நிவாரண உதவி தொகை பெறுவதற்கான வழிமுறைகள் பற்றியும், பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தையின் மனநிலை பற்றியும் விளக்கம் அளித்தனர்.
பயிற்சியில் அரியலூர் வட்டார துணை காவல் கண்காணிப்பாளரும், சிறப்பு சிறார் காவல் அலகு தலைவருமான மோகன்தாஸ், ஜயங்கொண்டம் வட்டார துணை காவல் கண்காணிப்பாளர் கென்னடி,  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் க. முகமது யூனுஸ்கான்,  நன்னடத்தை அலுவலர் க. திருமாவளவன்,  குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்  கண்ணையன், இளைஞர் நீதிக்குழும உறுப்பினர்கள் பட்டு,பேசுமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பாதுகாப்பு அலுவலர் ம.இருதயராஜ் வரவேற்றார்.
நிறைவில்,  தகவல் பகுப்பாளர் ஹ.செல்வம் நன்றி கூறினார்.  ஏற்பாடுகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.