மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

அரியலூரில் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழக  கேபிள் டி.வி ஆப்ரேட்டர்கள்

Updated On :25 டிசம்பர் 2018, 9:33 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழக  கேபிள் டி.வி ஆப்ரேட்டர்கள் பொது நலச் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் உயர்த்தியுள்ள கட்டண உயர்வை திரும்ப பெற்று,பொதுமக்கள் மிக குறைந்த கட்டணத்தில் கேபிள் பார்க்கும் வசதியினை ஏற்படுத்தி தரவேண்டும்.  கேபிள் டி.வி இணைப்புக்கு விதிக்கப்படும் 18%  ஜிஎஸ்டி வரியை 5 %மாகக் குறைக்க வேண்டும். கட்டணச் சேனல்களின் விலை உயர்வை தடுத்த நிறுத்த மத்திய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர் அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி. ரமேஷ் தலைமை வகித்தார்.  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.