தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காதலர்கள் சாவு குறித்து விசாரணை நடத்த வேண்டும்: தொல். திருமாவளவன் பேட்டி

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே கலப்புத் திருமணம் செய்து கொண்ட காதலர்கள் இறந்தது தொடர்பாக போலீஸார் விசாரிக்க

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:09 am

DIN

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே கலப்புத் திருமணம் செய்து கொண்ட காதலர்கள் இறந்தது தொடர்பாக போலீஸார் விசாரிக்க வேண்டும் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.
ஜயங்கொண்டம் அருகே கலப்புத் திருமணம் செய்து கொண்ட வீரத்தமிழன், ஜெகதீஸ்வரி ஆகியோர் சனிக்கிழமை விஷம் குடித்தனர். இதையடுத்து ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜெகதீஸ்வரியும்,  தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட  வீரத்தமிழனும் உயிரிழந்தனர். 
இதையடுத்து ஜெகதீஸ்வரியின் உடல் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.  ஆனால் திருமாவளவன் வரும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் எனக் கூறி உறவினர்கள்  காத்திருந்தனர்.  பின்னர் மாலை 5 மணியளவில் வந்த திருமாவளவன் ஜெதீஸ்வரியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதையடுத்து சடலத்தை உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து திருமாவளவன் கூறியது:இருவரும் தற்கொலை செய்து கொண்டனரா இல்லை கட்டாயப்படுத்தி விஷம் குடிக்க வைத்தார்களா என சந்தேகமாக உள்ளது. ஏனெனில் ஜெகதீஸ்வரியின் தாலியும் கைபேசியும் காணாமல் போயிருக்கிறது. எனவே காவல் துறை இதுகுறித்து விசாரிக்க  வேண்டும். ஆணவக் கொலைகள் தடுக்கப்பட தொடர்ந்து ஜனநாயக சக்திகள் குரலேழுப்பி வரும் நிலையில் தமிழக அரசு இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.  ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டமியற்ற வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.