போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

இன்று முதல்  அரியலூரில் தொழில்நெறி வழிகாட்டி வாரம்

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் திங்கள்கிழமை (ஜூலை 9) முதல் 13 ஆம் தேதி வரை தொழில்நெறி வழிகாட்டி மற்றும்

Updated On :9 ஜூலை 2018, 2:53 am

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் திங்கள்கிழமை (ஜூலை 9) முதல் 13 ஆம் தேதி வரை தொழில்நெறி வழிகாட்டி மற்றும் திறன் வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரத்துக்கான பேரணியை ஆட்சியர் மு.விஜயலட்சுமி தொடக்கி வைக்கிறார். 10 ஆம் தேதி மாற்றுத்திறனாளி மற்றும் ஆதரவற்ற விதவை ஆகிய முன்னுரிமை உடையவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி. 11 ஆம் தேதி மகளிருக்கான தொழில்நெறி வழிகாட்டும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
12 ஆம் தேதி பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் பயிற்சி. 13 ஆம் தேதி தொழிற்பயிற்சி நிலையங்களில் திறன் பயிற்சி அளிப்பது குறித்து தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மற்றும் பொதுமக்களுடன் தொழில்முனைவோர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. எனவே, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்  இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.