அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 43 லட்சத்து 50 ஆயிரத்தில் கட்டப்பட்ட முதியோர் சிகிச்சைக்கான மருத்துவப் பிரிவு,இயன்முறை சிகிச்சை பிரிவை அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.
அப்போது அவர் தெரிவித்தது: மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்துப் பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக முதியோர் சிகிச்சைக்கென தனியாக உள்நோயாளிகள் பிரிவு மற்றும் இயன்முறை சிகிச்சை பிரிவு சுமார் ரூ. 23.50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடடத்தில் 20 தீவிர சிகிச்சை மற்றும் நீண்ட நாள் நோய்வாய்ப்பட்ட முதியோருக்கு படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரிவுக்கென தனியாக ஒரு மருத்துவர், ஓர் இயன்முறை சிகிச்சையாளர், 4 செவிலியர், 4 பல்நோக்கு பணியாளர் நியமிக்கப்படவுள்ளனர். மேலும், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டறியும் கருவிகள் சுமார் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஆரம்ப நிலையில் கண்டறிந்து மேல் சிகிச்சையும் இங்கே வழங்கப்படவுள்ளது என்றார் அவர். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தார்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஜி.கே. லோகேஷ்வரி,பொது சுகாதாரத் துறை இயக்குநர் ஹேமசந்த்காந்தி, தலைமை மருத்துவர் ரமேஷ், மருத்துவர் முகமது ரியாஸ் மற்றும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நைஜீரியாவில் ஆயுதக் குழு தாக்குதல்

வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

அரசுப் பேருந்துகள் மோதல்: மூதாட்டி உயிரிழப்பு

ஜனவரி - மாா்ச் காலாண்டில் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் வருவாய் ரூ. 1.06 லட்சம் கோடி!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


