விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

கல்லக்குடி, காசான்கோட்டையில் ஜல்லிக்கட்டு: 36 பேர் காயம்

அரியலூர் மாவட்டம், கல்லக்குடி, காசான்கோட்டை ஆகிய இரு கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 36 பேர் காயமடைந்தனர்.

Updated On :23 ஜூலை 2018, 8:52 am IST

அரியலூர் மாவட்டம், கல்லக்குடி, காசான்கோட்டை ஆகிய இரு கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 36 பேர் காயமடைந்தனர்.
திருச்சி, பெரம்பலூர், அரியலூர்,தஞ்சாவூர், புதுக்கோட்டை,சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 400 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.  இதில் காளைகள் முட்டியதில் கல்லக்குடி நாகராஜன்(35), கோவிலூர் சரத்குமார்(22) உட்பட 9 பேர் காயமடைந்தனர். 
இவர்களில் பலத்த காயமடைந்த கீழப்பழுவூர் மணி (47), மதுரை மாவட்டம் வாடிப்பட்டி விக்னேஷ் (21) ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு ருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். 
காசான்கோட்டையில்.....
உடையார்பாளையம் அருகேயுள்ள காசான்கோட்டை கிராமத்தில் நடந்த  ஜல்லிக்கட்டில் அரியலூர், ஜயங்கொண்டம் உடையார்பாளையம், தா.பழூர் ,திருச்சி,லால்குடி,புள்ளம்பாடி,பெரம்பலூர், புதுகோட்டை,சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 600 காளைகள் கலந்துகொண்டன. 200 மாடுபிடி வீரர்கள் களத்தில் இருந்தனர். இதில் காளைகள் முட்டியதில் சமயபுரம் நந்தகுமார் (34), பெரம்பலூர் விஜயன் (35), புதுக்கோட்டை தங்கதுரை (21),மளத்தான்குளம் ஜெனித் (23) உள்ளிட்ட 27 பேர் காயமடைந்தனர். 
இவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடந்த இடத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த வீரர்கள் அரியலூர்,ஜயங்கொண்டம்,தா.பழூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும்,பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும்  பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.