அரியலூர் மாவட்டத்தில் ஆவின் நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகள் முகவர்களாக சேர திங்கள்கிழமைக்குள் விண்ணப்பிக்கலாம்.
முகவர்களாக சேர்ந்த பின் அவர்கள் ஆவின் நிறுவனத்தின் மூலம் அதன் உற்பத்திப் பொருள்களான பால்,வெண்ணெய் ,நெய்,ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருள்களை கொள்முதல் செய்து குளிர்ச் சாதனப் பெட்டிகளில் வைத்தும், மற்றும் இதர முறைகளில் பராமரித்தும் விற்பனை செய்யலாம். இதற்கு ஏதுவாக இடத்தின் வசதியை சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ அல்லது பயனாளிகள் தமது சொந்த முயற்சியால் அனுமதி பெற்று ஆவின் நிறுவனம் மற்றும் கடனுதவி வழங்கும் வங்கியின் ஒப்புதலுடன் தெரிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக் கடன் மானியமாக ரூ.25 ஆயிரம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் இன்று(திங்கள்கிழமை) அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் உள்ள அறை எண் 17- இல் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐரோப்பாவில் கடும் வெய்யில்! பிரான்ஸில் 40 பேர் பலி!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


