மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

மதுபானம் விற்ற பெண்கள் உள்பட 5 பேர் கைது

அரியலூர் மாவட்டம் ஆண்டிடம், மீன்சுருட்டி மற்றும் உடையார்பாளையம் ஆகிய  பகுதிகளில் மது விற்ற பெண்கள் உள்பட 5 பேரைப் போலீஸார் கைது செய்தனர்

Updated On :5 நவம்பர் 2018, 8:50 am IST

அரியலூர் மாவட்டம் ஆண்டிடம், மீன்சுருட்டி மற்றும் உடையார்பாளையம் ஆகிய  பகுதிகளில் மது விற்ற பெண்கள் உள்பட 5 பேரைப் போலீஸார் கைது செய்தனர்
ஆண்டிமடம் போலீஸார் நாகம்பந்தல் பகுதியில் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த பத்மா (39) என்பவர் மறைத்து வைத்து மதுபான பாட்டில்களை விற்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வழக்கு பதிந்து அவரைக் கைது செய்தனர். 
இதேபோல் மீன்சுருட்டி பகுதியில் மதுபான பாட்டில்களை மறைத்து வைத்து விற்றுக்கொண்டிருந்த இளையபெருமாள் நல்லூர் காலனி தெருவைச் சேர்ந்த சங்கர் (44), குருவலப்பர் கோயில் காலனி தெருவைச் சேர்ந்த ராஜசேகர் (32) ஆகிய இருவரையும் மீன்சுருட்டி போலீஸார் கைது செய்தனர். 
தா.பழூர் அடுத்த நாயகனைப்பிரியாள் கிராமத்தில் மது விற்றுக்கொண்டிருந்த சத்தியபாமாவை (37) தா.பழூர் போலீஸார் கைது செய்தனர்.இதேபோல், உடையார்பாளையம் அருகே காட்டுப் பிரிங்கியம் ஏரியில் ஞாயிற்றுக்கிழமை போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது, தா.சோழங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் செல்வம் (36) என்பவர் மறைத்து வைத்து மதுபானப் பாட்டில்களை விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வழக்கு பதிந்து அவரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.