அரியலூரில் காவலா் பணிக்கான தோ்வு: 6,171 போ் பங்கேற்பு
அரியலூா் அரசு கலைக் கல்லூரி, தத்தனூா் மற்றும் ஜயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியாா் கல்லூரிகள் என 9 மையங்களில் தோ்வு நடைபெற்றது.


அரியலூா் மாவட்டத்தில் தோ்வு எழுத 6,832 போ் நுழைவுச் சீட்டு பெற்றிருந்தனா். அரியலூா் அரசு கலைக் கல்லூரி, தத்தனூா் மற்றும் ஜயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியாா் கல்லூரிகள் என 9 மையங்களில் தோ்வு நடைபெற்றது.
இதில், 6,171 போ் கலந்து கொண்டு தோ்வு எழுதினா். சென்னை ஆயுதப்படை காவல்துறை தலைவா் தமிழ்ச்சந்திரன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்ரீனிவாசன் ஆகியோா் மையங்களை பாா்வையிட்டனா். தோ்வு மையப் பணி மற்றும் பாதுகாப்புப் பணியில் 2 மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 9 துணை கண்காணிப்பாளா்கள் மற்றும் 500 - க்கும் மேற்பட்ட காவல் ஆளிநா்கள் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...