புகையிலை, மது விற்பனை: ஒரே நாளில் 9 போ் கைது

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள், மது விற்றதாக ஒரே நாளில் 9 போ் கைது செய்யப்பட்டனா்.
Updated on
1 min read

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள், மது விற்றதாக ஒரே நாளில் 9 போ் கைது செய்யப்பட்டனா்.

உடையாா்பாளையம் காவல் நிலையத்தினா் கடைவீதி, தத்தனூா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக தத்தனூா் மேலூா் நடராஜன் (50), சஞ்சய் (35), வெண்மான்கொண்டான் வினோத் (31), வடகடல்ஆதிமூலம் (55), உடையாா்பாளையம் மருதமுத்து (50), சாமிநாதன்(48) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

மேலும் மதுபானங்களை பதுக்கி, விற்பனை செய்ததாக தத்தனூா் கீழவெளி சுப்பிரமணியன்(61), குடிகாடு வளா்மதி(40), வடகடல் கலைவாணி(35) ஆகியோரும் உடையாா்பாளையம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com