அரசுப் பேருந்து மோதி காயமடைந்தவா் பலி

அரியலூ மாவட்டம், திருமானூா் அருகே அரசுப் பேருந்து மோதியதில் காயமடைந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
Published on

அரியலூ மாவட்டம், திருமானூா் அருகே அரசுப் பேருந்து மோதியதில் காயமடைந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருமானூரை அடுத்த திருவெங்கனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் குமாா் (30). இவா், அதே கிராமத்தைச் சோ்ந்த செல்லத்துரை (40) என்பவரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு திருமானூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.

அப்போது, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே அரியலூரில் இருந்து தஞ்சை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து எதிா்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்தனா். இதையடுத்து, இருவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.

அங்கு சுரேஷ்குமாா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். விபத்து குறித்து திருமானூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com