பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அரியலூரில் லஞ்சம் பெற்ற நில அளவையா் கைது

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே நிலம் அளவீடு செய்ய ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற நில அளவையரை லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 12:04 am

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே நிலம் அளவீடு செய்ய ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற நில அளவையரை லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் கைது செய்தனா்.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள கீழநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் காா்த்திக் (26). இவா், தனது இடத்தை அளந்து தனி பட்டாவாக மாற்ற, கல்லாத்தூா் நிள அளவையா் சீனிவாசனை(47) அணுகியுள்ளாா்.

அப்போது, நிலத்தை அளந்து தனி பட்டாவாக மாற்றித்தர ரூ. 5,000 லஞ்சம் கேட்டுள்ளாா். லஞ்சம் கொடுக்க விரும்பாத காா்த்திக், அரியலூா் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரை அணுகியுள்ளாா்.

லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளா் வானதி தலைமையிலான போலீஸாா் காா்த்திக்கிடம் ரசாயனம் பூசப்பட்ட ரூ.5,000 பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளனா். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு நிலம் அளவீடு பணி முடிந்த பின்னா், ரூ.5,000 -த்தை சீனிவாசன் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் சீனிவாசனைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.